சிவகரனிடம் TID 5 மணி நேரம் விசாரணை

4 years ago
Sri Lanka
(142 views)
aivarree.com

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத தடுப்பு பிரிவின் கொழும்பு – கிருலப்பனை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (18) சுமார் 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள் , கூட்டங்கள் தொடர்பிலும் விசாரணை இடம்பெற்றது.

தாம் இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணையை எதிர் கொள்வதாகவும் எமது ஜனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த முனைவது நீதியான ஜனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம் எனவும் சிவகரன் கூறினார்.