இலங்கையில் தற்பொழுது கொவிட் தடுப்புக்கான மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
ஆனால் இதற்கு பொதுமக்கள் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்றாவது தடுப்பூசிக்கு எதிராக போலியான கருத்துக்களை/தகவல்களை பரப்புகின்ற 8 குழுக்களை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் அடிப்படைவாத மதம் சார்ந்த 3 குழுக்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த குழுக்கள் தொடர்பான புலனாய்வு விசாரணை நடத்தும் அரச புலனாய்வு பிரிவு, அதன் அறிக்கையை அடுத்தவாரம் காவல்மா அதிபருக்கு கையளிக்கவுள்ளது.
#ஞாயிறு லங்காதீப
