கொரோனாவை கொல்லும் மருந்து அறிமுகம் – மூக்கில் ஸ்ப்ரே செய்தால் போதும்.

4 years ago
World
(165 views)
aivarree.com

கொவிட் நோயாளர்களுக்கு மூக்கில் ஸ்ப்ரே செய்து பயன்படுத்தக்கூடிய மருந்து ஒன்றை இந்தியாவின் மருந்தாக்கல் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

கொவிட் நோயால் பீடிக்கப்பட்ட பெரியவர்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இந்த மருந்துக்கு இந்திய மருந்து பொருள் கட்டுப்பாட்டுச்சபை அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையைத் தளமாகக் கொண்டு இயங்கும் க்ளென்மார்க் (Glenmark) என்ற நிறுவனம், நைட்றிக் ஒக்சைட் நசல் ஸ்ப்ரே (ஃபாபிஸ்ப்ரே) (Nitric Oxide Nasal Spray / FabiSpray) என்ற பெயரில் இந்த மருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இதனை மூக்கில் தெளிப்பதன் மூலம், கொவிட் நோயை ஏற்படுத்துகின்ற கொரோனா வைரசுக்கு உடல் ரீதியாகவும் இரசாயன ரீதியாகவும் எதிர் பொருளை உருவாக்கி அவற்றைக் கொல்கிறது.

மூன்றாம் கட்ட சோதனையில், இந்த மருந்து 24 மணி நேரத்தில் 94 சதவீத வைரஸ் எண்ணிக்கையையும், 48 மணி நேரத்தில் 98 சதவீத வைரஸ் எண்ணிக்கையையும் குறைக்கின்றமை தெரியவந்துள்ளது.

NDTV