ஒசுசலவில் இலவச மருந்து விநியோகம்

4 years ago
Sri Lanka
(79 views)
aivarree.com

சுகாதார பணியாளர்கள் போராட்டம் 5ஆம் நாளாகவும் தொடர்வதால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்துள்ளனர்.

இதனால் மருந்துபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு, அரச ஒசுசலவில் இலவசமாக மருந்து விநியோகிக்கப்பட உள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.

நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியிலும் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter