ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் – மத்திய வங்கி அதிவிசேட வர்த்தமானி

4 years ago
Sri Lanka
(97 views)
aivarree.com

ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பெறுகைகள் மற்றும் கட்டாய ரூபாய் மாற்றம் தொடர்பாக மத்திய வங்கி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.


அதிலுள்ள முக்கிய 5 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


  1. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற பண்டங்கள் சேவைகளின் பெறுகைகள் கப்பலேற்றப்பட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் பெறப்படல் வேண்டும். 

  2. ஏற்றுமதி பெறுகைகள் (வருமானம்) இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுதல்.

  3. ஏற்றுமதி வருமானத்தில் 10 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளில் செலுத்தப்படல்.

  4. உபாய ஏற்றுமதி செயற்றிட்டங்கள் எனப் பதிவு செய்யப்பட்ட பொருள், சேவை ஏற்றுமதியாளர்களுக்கு மாத்திரம் இந்த விதிகளில் விதிவிலக்குண்டு. 

  5. ஏற்றுமதி பெறுகைகள் என்பதில், வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் இலங்கையில் உள்ளவருக்கு அனுப்பும் வெளிநாட்டுச் செலாவணியும் சேர்க்கப்படும். 


முழுமையான வர்த்தமானியைத் தமிழில் தரவிறக்கம் செய்ய…. 

http://documents.gov.lk/files/egz/2022/3/2270-66_T.pdf