எல்லா மரணங்களுக்கும் இனி PCR கட்டாயமில்லை

4 years ago
Sri Lanka
(106 views)
aivarree.com

அனைத்து மரணங்களுக்கும் இனிமேல் பிசீஆர் (PCR) பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையிலோ அல்லது வெளியிலோ மரணிக்கின்ற அனைவருக்கும் கட்டாயமாக பீசிஆர் செய்ய வேண்டியதில்லை.

எவ்வாறாயினும், தேவைப்படுமாக இருந்தால், உரிய சட்ட வைத்திய அதிகாரியின் விருப்பத்துடன் PCR பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.