ஊடக நிறுவனங்கள் போன்ற அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்த ஆலோசிக்கப்படுகிறது.
இதற்கான யோசனை ஒன்றைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்கள் சொந்தமாக மின்பிறப்பாக்கியை கொண்டுள்ளதால், அதன் ஊடாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் தேசிய மின் கட்டமைப்பில் மின் விநியோகத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதப்படுகிறது.
ஆனால் இந்த யோசனைக்கு மின்சார சபையின் அதிகாரிகள் பலர் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
