உக்ரைன் – ரஷ்யா / ஞாயிறு மாலை வரையான Updates

4 years ago
World
(67 views)
aivarree.com

1) ரஷ்ய ஜனாதிபதி உடனடியாக யுத்தத்தை கைவிட்டு, உக்ரைன் உடன் அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

2) உக்ரைன் தாக்குதல்களை நிறுத்தினால் மாத்திரமே ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

3) உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 1100க்கும் அதிகமானவர்களை ஞாயிற்றுக் கிழமை ரஷ்யா கைது செய்துள்ளது – இதுவரையில் இந்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் எண்ணிக்கை 9472 ஆக அதிகரித்துள்ளது.

4) மொல்டோவா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கொள்ள விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு பூரண ஆதரவளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

5) உக்ரைன் மீது ‘இராணுவ நடவடிக்கையே’ மேற்கொள்ளப்படுவதாக ரஷ்யா கூறும் கூற்றை நிராகரித்துள்ள பாப்பரசர் ஃப்ரான்சிஸ் அங்கு நடப்பது ‘யுத்தமே’ என்றும் தெரிவித்துள்ளார்.

6) ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனில் இருந்து இதுவரையில் 1.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் – அங்கு யுத்த நிறுத்தம் ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

7) ஒடேசா நகரில் பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு ரஷ்யா தயாராவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

8) உக்ரைனின் யுத்தம் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட நீடிக்கலாம் என்று பிரித்தானியாவின் பிரதி பிரதமர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

9) மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான இரண்டாம் கட்ட முயற்சிகள் இன்று இடம்பெற்றன.

10) உக்ரைனில் பல சுகாதார நிலையங்களை ரஷ்யா தாக்கியுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.