உக்ரைன் – ரஷ்யா/ 04/03 மாலை வரையான முக்கிய 11 செய்தித்துளிகள்

4 years ago
World
(111 views)
aivarree.com
  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சனிக்கிழமை காலை உக்ரைன் தொடர்பான அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
  • சபொரிஸியா அணுசக்தி மையத்தில் இருந்து கதிர்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
  • சபொரிஸியா அணு சக்தி மையத்தை ரஷ்யா கைப்பற்றியதாக கூறப்பட்ட போதும், அது வழமைப் போன்று இயங்குவதாகவும், அது அமைந்துள்ள பிரதேசத்தை ரஷ்யா கடந்த திங்கள் முதல் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது – மேலும் அங்கு உக்ரைன் ‘நாசகாரர்களே’ தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
  • பலாரஸின் படையினர் யுக்ரெனுக்கு அனுப்பிவைக்கப்பட மாட்டார்கள் என்று, அந்த நாட்டின் ஜனாதிபதி அலக்சாண்டர் லூக்காசென்கோ தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யா, உக்ரைனில் மேற்கொண்ட உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • உக்ரைனில் இருந்து இதுவரையில் 18,000 அகதிகள் வந்திருப்பதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
  • தமது அண்டை நாடுகள் பதட்டத்தை ஏற்படுத்த முனைய கூடாது என்றும், அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் ரஷ்யா தக்க பதிலை வழங்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.
  • உக்ரைனின் தெற்கு நகரான மைகொலாயிவில் ரஷ்ய படையினரின் முன்நகர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார் – எதிர்வரும் நாட்களில் ஏனைய இடங்களிலும் அவ்வாறு நிறுத்த முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • உக்ரைன் தலைநர் கியவிற்கு வடக்காக 40 மைல் நீளமான ரஷ்ய படை தமது பயணத்தை இடைநிறுத்தி கடந்த 3 நாட்களாக நகர்வின்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
  • அணு சக்தி கட்டமைப்பை ரஷ்யா கைப்பற்றுகின்றமைக்கு எதிராக ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு உக்ரைன் ஜனாதிபதி கோரியுள்ளார் – தம்முடன் புட்டின் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அவர் மீண்டும் கோரியுள்ளார்.
  • நேட்டோ ரஷ்யாவுடன் மோதிலில் ஈடுபடும் திட்டத்தில் இல்லை – ஆனால் அவ்வாறான ஒரு நிலைக்கும் தயாராக இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி ப்லிங்கென் தெரிவித்துள்ளார்.