பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான அமெரிக்க புதிய தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.
“அனைத்து இலங்கையர்களின் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு நமது அரசாங்கங்கள் ஒத்துழைக்கக்கூடிய வழிகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது” என அவர் டுவிட் செய்துள்ளார்.
மேலும் “ஜனநாயக ஆட்சி மற்றும் இலங்கையின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் நல்வாழ்வுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
