இலங்கையில் 4 அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு / ஒப்புக்கொண்டது நிதியமைச்சு.

5 years ago
tamilnewsline.com

பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணி பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வெள்ளிக்கிழமை முதலாவது கூட்டத்தை நடத்தியது.


இதன்போது நாட்டில் நிலவுகின்ற அடிப்படை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.


முக்கியமாக பால்மா, சீமெந்து, எரிவாயு மற்றும் கோதுமை மா போன்றவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு இருக்கிறது என்ற விடயம் இந்த இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.


அதேநேரம் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களிடம் வெளிப்படையாகச் சென்றடைகின்றது என்பதை உறுதிப்படுத்துவது சம்பந்தமாக இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டது.


சில இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படும் நிலைமை குறித்தும் அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற