வெளியானது குரல் பதிவு / சதொச தலைவர் உள்ளிட்டோர் பதவி பறிபோனது

5 years ago
tamilnewsline.com

சதொசவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் அதன் தலைவர் உள்ளிட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.


சுமார் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான நிதி மோசடி தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகி இருந்தது.


இதனை அடுத்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துள குணவர்தன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 


இதற்காக 2019 முதல் 2021 வரையில் இடம்பெற்ற மோசடிகள் சம்பந்தமாக விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.