இலங்கையின் வர்த்தக இடைவெளி அதிகரிப்பு.

4 years ago
(48 views)
aivarree.com

வர்த்தக இடைவெளி என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவித்தியாசமாகும்.

கடந்த 2021ம் ஆண்டு இலங்கையின் வர்த்தக இடைவெளியானது 2 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு வர்த்தக இடைவெளியானது 8.13 பில்லியன் டொலர்களாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்த இறக்குமதிகள் 28.5 சதவீதம் அதிகரித்து 20.6 டொலர் பில்லியனாகவும், ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்து 12.5 டொலர் பில்லியனாகவும் அதிகரித்துள்ளன.

2021ஆம் ஆண்டு மொத்த இறக்குமதி 47 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.