மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் மின்சார தேவையை ஈடுசெய்வது தொடர்பான புதிய பொறிமுறை ஒன்றை இலங்கை மின்சார சபையும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் இணைந்து செவ்வாய்கிழமை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரத்தை கட்டம் கட்டமாக துண்டிப்பதா? அல்லது மாற்று பொறிமுறையை கையாள்வதா? என்பது தொடர்பாக ஆராயப்படுகிறது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை இருதரப்புக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.
அதன் விபரங்கள் திங்கட்கிழமை (14) அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
