தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து அரசியல் அதிகாரத்தை பெறுவதல்ல தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சியில் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இன்றைய நாட்டின் நிலைமையை நாங்கள் அறிவோம் – உலகமே போர்க்களமாக மாறத் தொடங்கியுள்ளது,
இவற்றால் இலங்கை போன்ற ஏழை நாடுகள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும்,
அந்த பிரச்சினைகளை தீர்க்க அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும்” என மைத்திரி கூறியுள்ளார்.
