12 ஆண்டுகளின் பின் கடற்புலிகள் பிரிவின் படகு மீட்பு

4 years ago
Sri Lanka
(188 views)
aivarree.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினால் பயன்படுத்தப்பட்ட தற்கொலைப் படகு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது போரின் போது கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் குழுவொன்று சாளை வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வழங்கிய நிலையில், இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பொருத்தப்பட்டிருந்த குண்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.