அதிவேக நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட அதிசொகுசு கார்கள் / உண்மை நிலை என்ன? 

4 years ago
Sri Lanka
(51 views)
aivarree.com

இலங்கையில் வாகன இறக்குமதிக்குத் தடை நிலவுகின்ற சூழ்நிலையில், அமெரிக்காவிலிருந்து 2 அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டன.


அதனைப் பார்த்த மற்றுமொரு வாகன சாரதி, காணொளியாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.


இதனை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


இதன்படி இடதுபக்க சாரதி இருக்கைகளைக் கொண்ட 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கார்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, வலதுபக்கத்துக்கு மாற்றி பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


2003ம் ஆண்டு முதல் இந்த வர்த்தகம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.