ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

3 months ago
tamilnewsline.com

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து, பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 100 கிலோமீற்றர் வரையான பயணங்களுக்கான பேருந்து கட்டணங்களை 12 வீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணங்களை 20 வீதத்தினாலும் அதிகரிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.