நாட்டில் பொது அவசரகாலநிலை முடிவுக்கு – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

3 months ago
tamilnewsline.com

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகாலநிலை பிரகடனத்தை இம்மாதத்திலிருந்து மேலும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி காரணமாக, மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிட்டு நாட்டில் பொது அவசரகாலநிலை அமுல்படுத்தப்பட்டது.

அத்துடன் இந்த அவசரநிலை பிரகடனம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.