ISIS பயங்கரவாதிகளின் புதிய தலைவர் அறிவிப்பு

4 years ago
World
(58 views)
aivarree.com

இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பு (ISIS) தமது தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷேமி அல்-குரைஷியின் மரணத்தை வியாழன் அன்று உறுதிப்படுத்தியது.

அத்துடன் அபு அல்-ஹசன் அல்-ஹஷேமி அல்-குரைஷியை அதன் புதிய தலைவராக அறிவித்தது.

அமெரிக்க சிறப்புப் படைகள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இந்த பயங்கரவாத குழுவின் தலைவரைக் கொன்றதாக ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஃபெப்ரவரியில் அறிவித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு இதேபோன்ற தாக்குதலில் நீண்டகாலம் ISIS தலைவராக இருந்த அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.