இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நாட்டுக்கு

7 hours ago
SPORTS
(3 views)
aivarree.com

இந்திய தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஸ் தொடரின் ஒரு பகுதியாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.