உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனைகள், எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (09) நான்காவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதனையடுத்தே, இந்த மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கான பரிசீலனைகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
