சுரேஷ் சல்லே வழக்கில் கர்தினால் மல்கம் ரஞ்சித் திடீர் நீதிமன்ற நடவடிக்கை!

3 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சல்லேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறுக்கீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சுரேஷ் சல்லேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சமர்ப்பணங்களைச் செய்வதற்கு, கர்தினால் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

அத்துடன், சுரேஷ் சல்லேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு கர்தினால் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு எவ்விதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சுரேஷ் சல்லே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்தத் தடுப்புக் காவல் உத்தரவானது சட்டவிரோதமானது என்றும், அதனைச் செல்லுபடியற்றதாக அறிவிக்க வேண்டுமென்றும் சுரேஷ் சல்லே தனது மனுவில் வாதிட்டுள்ளார்.