புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

5 hours ago
Sri Lanka
(4 views)
aivarree.com

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அவற்றின் சேவைகளை முறையாக முன்னெடுக்கும் நோக்கில் புதிய பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, முதற்கட்டமாக 175 டபள் கெப் (Double Cab) வாகனங்கள், 100 தராதரமிக்க நோயாளர் காவு வண்டிகள் (Ambulances), 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 160 டிப்பர் ரக வாகனங்களை புதிய கொள்வனவு நடைமுறைகளின் கீழ் அவசரமாகக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளைக் கருத்திற்கொண்டே இந்த வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.