வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உட்பட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

3 months ago
tamilnewsline.com

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உட்பட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போயுள்ளதாக அச்சபையின் செயலாளரால் வவுனியா தலைமைத் காவல்துறை நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரை கைது செய்வதற்கான அனுமதியை இன்று நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதன்போது, காவல்துறையினரின் கோரிக்கையை ஆராய்ந்த வவுனியா நீதவான் நீதிமன்றம், வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சு. காண்டீபன் உட்பட நான்கு பேரைக் கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.