நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பேராயர் அறிவிப்பு

7 hours ago
Sri Lanka
(13 views)
aivarree.com

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

பேராயர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட கருத்துக்கள், மதக் குழுக்களுக்கு இடையே அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியவை என அருட்தந்தை சிறில் காமினி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி தனது பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி, கடந்த ஜூலை 2ஆம் திகதி பேராயரை பழக்கூடை ஒன்றுடன் நேரில் சந்தித்துப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும், அவர் குறிப்பிடப்பட்ட அந்த நாளில், திருத்தந்தை 16ஆம் லியோ ஆண்டகையினால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக பேராயர் வத்திக்கானில் தங்கியிருந்தார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் போலியான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.