7 ஆண்டு தாகத்தை தீர்த்த பெத்தும் நிஸ்ஸங்க.

4 years ago
SPORTS
(78 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அண்மையில் நிறைவடைந்த இந்திய தொடரில் சிறப்பாகச் செயற்பட்டதன் காரணமாக 20/20 தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலிய எதிர் தொடரின் முடிவில், 20/ 20 துடுப்பாட்ட தரவரிசையில் பெத்தும் 15வது இடத்திற்கு முன்னேறினார்.

பின்னர் இந்திய தொடரில் ஆறு இடங்கள் முன்னேறியுள்ளார்.

ஏறத்தாழ 7 ஆண்டுகளின் பின்னர் 20/20 தரவரிசையில் இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.