கொவிட் தடுப்புக்கான நான்காவது ஊசி தொடர்பாக இப்போதே கதைப்பது உகந்ததல்ல என்று சுகாதாரச் சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் 4ஆம் தடுப்பூசியை கோருகின்ற வெளிநாடுகளுக்குச் செல்வோருக்காக விசேடமாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
இது தேவையின் நிமித்தமே மேற்கொள்ளப்படுகிறதே தவிர, அனைவருக்கும் நான்காம் தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
