டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டு நோய்களுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியானவை.
இலங்கையில் டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டு நோய்களும் பரவிவருகின்றன.
இந்த நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்பன பொதுவான அறிகுறிகளாக உள்ளன.
இதேவேளை இவ்வாறான அறிகுறிகள் எவையும் இல்லாமல், தாங்களாகவே சுயமாக கருதிக் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்வோரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
