45 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் கைதான யாழ்ப்பாணப் பெண்

5 years ago
Sri Lanka
(112 views)
aivarree.com

சரோஜினி (65) என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் 19 வயதில் 1977ஆம் ஆண்டு தமிழகத்துக்கு சென்றார்.

அங்கு அவர் அய்யாக்கண்ணு என்பவரை திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த தினம் அவர் கொழும்புக்கு மீண்டும் பிரவேசிப்பதற்கு இந்திய கடவுச்சீட்டை தயாரித்து சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற முற்பட்டார்.

இதன்போது அவரை சோதனை செய்த அதிகாரிகள் அவரிடம் இருப்பது போலி கடவுச்சீட்டு என்பதை உறுதிப்படுத்தி அவரை கைது செய்துள்ளனர்.

45 ஆண்டுகளாக வீசா எதுவும் இன்றி இந்தியாவில் தங்கி இருந்த அவருக்கெதிராக கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.