க்றிஸ் கெயார்ன்ஸுக்கு குடல் புற்றுநோய்

5 years ago
SPORTS
(111 views)
aivarree.com

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் க்றிஸ் கெயார்ன்ஸுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

க்றிஸ் கெயார்ன்ஸ் தமது இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான பதிவினை இட்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வைத்தியசாலைக்கு சென்று சாதாரண உடற் பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அடுத்தகட்ட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தமது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.