4 விவசாயிகளை காரேற்றி கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் இருந்த இந்திய அமைச்சரின் மகன் விடுதலை

5 years ago
tamilnewsline.com

உத்தர் பிரதேசில் 4 விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் சிறையின் பின்வாசல் வழியாக விவசாயிகள் கொல்லப்பட்ட போது அவர் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் காரை போன்ற வாகனம் ஒன்றிலேயே சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அவரது கார் செலுத்தப்பட்ட நாளில் 8 பேர் பலியாகினர்.

அவர் தலா 3 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டதாகவும், நகரத்தை விட்டு வெளியேற எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி கூறினார்.