கையெழுத்து வேட்டை / கொழும்பில் ரயில் நிலையம் முன்னால் கூடிய MPகள்

4 years ago
Sri Lanka
(75 views)
aivarree.com

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்றிருந்தது.

சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுஃப் ஹக்கீம், மனோ கணேசன் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, சாணக்கியன் MP உள்ளிட்டோரும் மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் அண்மையில் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டு, வடக்கில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.