30 மணி நேரமாக நிலத்தடி ரயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள் (Video)

4 years ago
World
(50 views)
aivarree.com

ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப உதவி கேட்பது போன்ற வீடியோக்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் மாணவர் மணீஷ் ஜெய்ஸ்வால், டுவிட்டரில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், சுமார் 30 மணி நேரமாக மெட்ரோ ரயில் நிலையத்தில் அவர்கள் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

“நாங்கள் உதவியற்றவர்களாக உணர்கிறோம். காலையில் இருந்து மூன்று நான்கு குண்டுகள் நகரத்தைத் தாக்கியுள்ளன” என அவர்கள் கூறுகின்றனர்.

உக்ரைனில் சுமார் 16,000 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாவர்.

https://twitter.com/ndtv/status/1497108358435803136?s=21