2026 உயர்தர செய்முறைப் பரீட்சைக்கான மதிப்பீட்டாளர்கள்: விண்ணப்பங்கள் கோரல்

4 hours ago
Sri Lanka
(9 views)
aivarree.com

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை சபைக்கான மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

இன்று (14) முதல் ஜூலை 28ஆம் திகதி வரை பரீட்சைத் திணைக்களத்தின் இணையவழி விண்ணப்ப முறையூடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணைய நுழைவாயிலின் ஊடாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர்,0112784208 / 0112784537 / 0112785922 என்ற தொலைபேசி என்கள் அல்லது alexampractical@gmail.com என்ற இணையதளத்தின் வழியாகவும் தொடர்புக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.