2 ஜெர்மன் பெண்கள் இலங்கையில் துஸ்பிரயோகம் – பொலிஸ் முறைப்பாடு

4 years ago
Sri Lanka
(122 views)
aivarree.com

கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஜெர்மன் பெண் (32) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக குறித்த பெண்ணால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமக்கு போதை பொருள் வழங்கி தம்மை தமது ஆண் நண்பரே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கண்டியைச் சேர்ந்தவர் – அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டார்.

அதேபோன்று தங்காலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் ஜெர்மன் நாட்டு பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

Reported by
Editorial Reporter