140,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ள தங்க நகை விலை

4 years ago
(102 views)
aivarree.com

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க நகை விலை அதிகரித்து வருகிறது.

திங்கட்கிழமை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணுக்கான விலை 132,000 ரூபாவாக நிலவியது.

இலங்கை மத்திய வங்கி இலங்கை நாணயப் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்து, டொலர் ஒன்றுக்கு நிகரான பெறுமதி 230 ரூபா என நிர்ணயித்துள்ளது. 

இதனை அடுத்து தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் மாதங்களில் டொலரின் பெறுமதி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், அதற்கு நிகராக தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 140,000 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பு செட்டியார் தெருவின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.