1200க்கும் அதிகமானோருக்கு கொவிட்

4 years ago
Sri Lanka
(50 views)
aivarree.com

இலங்கையில் செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 630,599ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 19,106 பேர் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.