12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்குவது குறித்த பரிந்துரைகளை இந்த வாரம் சுகாதார அமைச்சு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு குழந்தை நல மருத்துவர்கள் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
அதன்படி, அதற்கான பரிந்துரைகளை சங்கம் இந்தவாரம் வழங்கவுள்ளது.
இதேவேளை, 12 -16 வயதுக்குட்பட்ட சுமார் 455,000 சிறார்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே கூறியுள்ளார்.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு இந்நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர்; தெரிவித்தார்.
