ஹிட்லர் பாணியில் பொதுமக்கள் தகவல் திரட்ட முனையும் அரசு – எதிர்கட்சி எச்சரிக்கை

4 years ago
Sri Lanka
(50 views)
aivarree.com

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமுக காவல்துறை அலுவலர்களை நியமித்து, பொதுமக்களின் அரசியல், குற்றவியல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் திரட்டவுள்ளது.

இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த பணிக்காக சகல கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டு காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், படித்த தன்னார்வ இளைஞர்களும் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஹிட்லரின் நாசிப்படை இயக்கிய இரகசிய காவல்துறை குழுவான கெஸ்டாபோவுக்கு (Gastapo) ஒத்தாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களது தனிப்பட்ட விபரங்களை திரட்டவும், அரசியலில் காவல்துறையினர் தலையீடு செய்வதையும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.