ஹிஜாப்/ போராடும் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் விசமிகளால் வெளியீடு

5 years ago
tamilnewsline.com

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கான அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 6 முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்கள் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது பிள்ளைகளின் தனிப்பட்ட விபரங்களை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

பிள்ளைகளை அச்சுறுத்துவதற்கு அவற்றை பயன்படுத்தப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கபெற்றதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஹிஜாப் விவகார வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாதென இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter