ஹிஜாப் அணியாததாலேயே பாலியல் வன்புணர்வுகள் அதிகரிக்கின்றனவாம்/ இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சர்ச்சைக் கருத்து.

4 years ago
World
(169 views)
aivarree.com

இந்தியாவில் பெண்கள் அதிகளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றமைக்கு காரணம் ஹிஜாப் அணியாமையாகும் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில அவை உறுப்பினர் (MLA) சமீர் அஹமட் கூறியுள்ளார்.

பெண்கள் தங்களது அழகினை மறைத்துக் கொள்வதற்காகவே ஹிஜாப் அணிகிறார்கள்.

அவ்வாறு பலர் அணியாமல் இருப்பதாலேயே பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இந்தியாவில் இடம்பெறுகின்றன.

சகலரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

தம்மை பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றவர்களும், தமது அழகை வெளியில் காட்ட விரும்பாதவர்களும் ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.