ஜேர்மனி ஜனாதிபதியாக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தெரிவு

4 years ago
World
(46 views)
aivarree.com

பெரும்பான்மையான வாக்குகள் பெற்று ஜேர்மனியின் ஜனாதிபதியாக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு செய்யும் கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது.

இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.