வேலை நாட்களை 4ஆக குறைக்க அஜித் நிவாட் கப்ரால் யோசனை

4 years ago
Sri Lanka
(120 views)
aivarree.com

நாட்டில் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.

இதன்படி,

1) நிறுவனங்களில் நாள் ஒன்றில் வேலை செய்கின்ற மணித்தியாலங்களின் அளவை கூட்டுவது (காலை 7:30 – மாலை 5:30)

2) வாராந்த வேலை நாட்களை 4 ஆக குறைத்தல்.

3) தனித்தனி வாகனங்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை பயன்படுத்த தூண்டுதல்.

4) சிக்கனமாக எரிபொருளை பாவிப்பதற்கு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்தல்.

ஆகிய பரிந்துரைகளை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்துள்ளார்.