நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்த போதும், அந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை.
தற்போது 1 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக பசில் தமது மனைவி மற்றும் திறை சேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல ஆகியோருடன் இந்தியா சென்றுள்ளார்.
