விராட் கோலி நீக்கம் | புதிய தலைவரை அறிவித்தது RCB

4 years ago
SPORTS
(58 views)
aivarree.com

IPL கிரிக்கெட் அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) தலைவராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஃபஃப் டு ப்லெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், அந்த அணியின் தலைவராக இருந்த விராட் கோலிக்கு பதிலாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் ஒன்றில் ஃபஃப் டு ப்லெசிஸ் முதல்முறையாக ஒரு அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் ஏல நிகழ்வில் அவர் ஏழு கோடி ரூபாவுக்கு பெறப்பட்டார்.

தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ப்லெசிஸ், இம்முறை ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.