வாசு பதவி துறக்கிறார்?

4 years ago
Sri Lanka
(108 views)
aivarree.com

அமைச்சர் வாசு தேவ நாணயக்கார புதன்கிழமை தமது பதவியை துறப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது சகாக்களான விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கப்பட்டதை அடுத்து, தாம் தொடர்ந்து அமைச்சுப் பொறுப்புகளை முன்கொண்டு செல்ல முடியாது என கூறி இருந்தார்.

அமைச்சரவையை புறக்கணித்ததுடன், அமைச்சினால் அவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை திருப்பி கொடுத்திருந்தார்.

தற்போது அமைச்சு பதவியில் இருந்தும் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் தரப்பில் இருந்து எதுவும் இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை.