அரச மற்றும் அரச அனுசரனைப்பெற்ற பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவடைந்த நிலையில், கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புகின்றன.
கடந்த வாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், கொவிட் நிலைமை கருதி மாணவர்கள் கட்டம் கட்டமாக அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முழுமையாக அழைக்கப்படுகிறார்கள்.
சுகாதார பழக்க வழக்கங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி, அனைத்து மாணவர்களும் ஒன்றாகப் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
