லதா மங்கேஸ்கர் காலமானார்.

5 years ago
World
(274 views)
aivarree.com

இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


92 வயதான அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில், மீண்டும் உடற்பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.


அவருக்கு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு மொழிகளில் 50,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளதாக கூறப்படுகின்ற போதும், அதனை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.