லதா மங்கேஷ்கருக்கு பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை / மோடியும் கலந்து கொள்கிறார்

5 years ago
World
(118 views)
aivarree.com

இந்தியாவின் புகழ்மிக்க மிக்க பாடகி பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் தமது 92-வது வயதில் இன்று (06) காலை காலமானார்.

அவரது இறுதிக்கிரியை இன்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் இடம்பெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

அத்துடன் இந்தியாவில் அவரது பிரிவுக்கு துயர் பகிரும் வகையில் இரண்டு நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படும்.

இன்றும் நாளையும் அங்கு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதற்கும் எந்தவிதமான அரச களியாட்ட நிகழ்வு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.